பாறை ஓவியம்200 ஆண்டுகளுக்கு முன் குகை ஓவியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மனிதர்களால் வரையப்பட்டுள்ளது. கிறுக்கல், கோடு, வளை கோடு படங்களாக இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டது. 1837ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் குகை ஓவியம் ஒன்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த குகை ஓவியங்கள் உலக அளவில் ஏற்கப்படவில்லை. ஐரோப்பாவின் அல்மிரா நகரில் மகத்லேனிய பண்பாட்டை விளக்கும் வகையில் குகை ஓவியம் கண்டறியப்பட்டது. படிப்படியாக பல்வேறு நாடுகளில் குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி, கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் மலைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது பழனி, திண்டுக்கல் கோவை பாலமலை. வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகை ஓவியங்கள் கண்டறியப்பட்டது தொல்லியல் துறையினர் இந்த அபூர்வ ஓவியங்களை உலகிற்கு அறிவித்தும் இயற்கை சூழல் காரணமாக குகை ஓவியங்கள் அடையாளம் கண்டறிய முடியாத அளவிற்கு அழிந்து வருகின்றன .குகை ஓவியங்கள் பாறை ஓவியங்கள் என அழைக்கப்படுகிறது. இவற்றில் வட்டெழுத்து பிராமி வகை எழுத்துகளும் இடம் பெற்றுள்ளது சில பாறைகள் திறந்த வெளியிலும் சில பாறைகள் மறைவாகவும், குகை போன்றும் அமைந்துள்ளது ளது. வருங்கால மக்களுக்கு பழங்கால மக்களின் பழக்கம் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை விளக்கும் வகையில் படக்காட்சிகள் குகைகளில் தீட்டப்பட்டிருந்தது. மாடு வளர்ப்பு விவசாயம் தியானம் குடும்ப வாழ்க்கை குறித்த படக்காட்சிகளில் குகை ஓவியங்களில் அதிகளவு கண்டறியப்பட்டது தொல்லியல் துறைகளில் சில வகை பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.