ஆர்டிஒ பைன் என ரூ16 லட்சம் மோசடி ; குஜராத் கும்பல் கைது
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் (71) என்பவருக்கு கடந்த 8.09.2025 தேதி ஆர் டி ஒ அபராதம் செலுத்துவது போல ஒரு அப்ளிகேசன் அவரது வாட்ஸ்ஆப்பில் வந்துள்ளது.
அவர் தனது வாகனத்திற்கு பைன் ஏதும் வந்துள்ளதா என அறியவேண்டி மேற்படி ஆப்பை இன்ஸ்டால் செய்துள்ளார். அப்போது உடனே அவரது மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு தொடர்ந்து அவரது மொபைலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பின்னர், அடுத்தநாள், அவரது மொபைல் எண்ணிற்கு தொடர்ந்து OTP வந்துகொண்டே இருந்துள்ளது. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்த 16.50 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக கோவை மாநகரம் சைபர் கிரைம் போலீசில் புகார் தரப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இதில் தொடர்புடைய குஜராத் மாநிலம் சூரஜ் நகரை சேர்ந்த
10 பேரை கைது செய்தனர்.
விசாரணையில்
ரஜ்னிபாய் தல்ஷிபாய் (37),
ஹிம்மத்பாய் ரடாடியா
(36), ரடாடியா சவன் (34),
கோஹில் விஜய் தயாள்பாய் (37)
ரத்தோர் ஜிதேந்திரசிங் ஷ்ரவன்சிங் (26)
கிராசே மகேந்திரசிங் தாகேசிங் (35)
சோவாடியா மிரல் மனோஜ்பாய் (22),
கபில் ராஜுபாய் கோத்ரே (36), சோவடியா மீட் மனோஜ்பாய் (25), பால் சந்தன் ஜெயநாத் (34)
என தெரிய வந்தது.
இவர்களிடமிருந்து 311 கிரெடிட் கார்டுகள், 10 செல்போன், 3.50 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 6.39 லட்ச ரூபாய் நீதிமன்றம் மூலம் மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் வயதான நபர்களை குறி வைத்து செல்போனில் மெசேஜ் அனுப்பி தொடர்ந்து பல இடங்களில் கைவரிசை காட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது. பல மாநிலங்களில் இவர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என தெரிகிறது இவர்களை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
