இதோட 12 வது மிரட்டல்; கோவை கலெக்டர் ஆபீஸ் பீதி

கோவை மாவட்ட கலெக்டர் ஆபீஸ் க்கு கடந்த சில மாதங்களில் 11 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. டார்க் நெட் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து மிரட்டல் மெயில் அனுப்பி வருவதாக தெரிகிறது. இந்த மிரட்டல் மெயில் அனுப்பும் மர்ம நபர்கள் யார் என கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரால் கண்டறிய முடியவில்லை.

இன்று 12 வது முறையாக மிரட்டல் இமெயில் வந்தது. எதைத்தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலமாக கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறிய முடியவில்லை. தொடர்ந்து போலீசுக்கும் மோப்பநாய்க்கும் வேலை தரும் அந்த மர்ம நபர் யார் என கண்டறிய முடியாத நிலைமை இருக்கிறது. மிரட்டல் நபர் குறித்த எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. போலீசாரால் கண்டறிய முடியவில்லை என உணர்ந்த அந்த நபர் தொடர்ந்து மிரட்டி வருவதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *