இன்னும் 35 ஆயிரம் மகளிருக்கு உரிமை தொகை..!

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் |பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 3.85 லட்சம் பெண்கள் பயன் அடைந்தனர். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் மேலும் விடுபட்ட மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் நடைபெற்ற 300க்கும் மேற்பட்ட முகாம்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என விண்ணப்பித்தனர்

. இந்த விண்ணப்பங்களில் இருந்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரை தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்த பெண்களின் விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக பரிசீலனை செய்து வருகின்றனர். முதல் கட்டமாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது 2ம் கட்டமாக

புள்ளியில் துறை அலுவலர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில நாட்களுக்குள் நிறைவு பெறும். கோவை மாவட்டத்தில் கூடுதலாக 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்படும் என தெரிகிறது.

வரும் 15ம் தேதிக்கு பின்னர் கூடுதலான மகளிர்களுக்கு உரிமை தொகை அவர்களின் வங்கி கணக்கில் வழங்கும் வகையில் அதிகாரிகள் திட்டமிட்டு பணி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *