ஈஷாவில் மகா சிவராத்திரி விழா
கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா யோக மையத்தில் ஆதியோகி சிலை முன்பு மகா சிவராத்திரி விழா இன்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஈசா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆதியோகி சிலை முன்பு லேசர் ஷோ மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மாநிலங்களை சேர்ந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோவை நகரில் இருந்து ஈசா யோகா மையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது. இந்த வளாகத்தில் பல ஆயிரம் பேர் குவிந்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஈஷா வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிக அளவு ஈடுபட்டிருந்தனர்.
