உக்கடம் மேம்பாலத்திற்கு இனி சி.சுப்பிரமணியம் மேம்பாலம்..

கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்திற்கு ஜி டி நாயுடு மேம்பாலம் என பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் பல்வேறு சர்ச்சை மற்றும் வரவேற்பை பெற்றது. இது ட்ரெண்டிங் ஆன நிலையில் கடந்தாண்டு கோவை உக்கடம் முதல் ஆத்து பாலம் வரை அமைக்கப்பட்ட 1.9 கிலோமீட்டர் தூர மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி சுப்பிரமணியம் பெயர் இன்று வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சி சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர் வைத்து அறிவிப்பு வெளியிட்டார். பழைய மேம்பாலத்திற்கு புதிதாக வைக்கப்பட்ட பெயர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *