உச்சா போனா உதை.. நகை பணம் இழந்த வாலிபர்

கோவை சாய்பாபா காலனி பாலசுந்தரம் வீதி பகுதியை சேர்ந்தவர் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா வளாகத்திற்கு சென்றார்.

அங்கே மறைவான பகுதியில் சிறுநீர் கழிக்க சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒண்டிப்புதூர் எஸ் எம் எஸ் லே-அவுட் பகுதி சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (25) பிரதீப்( 23 )கார்த்திக் (25) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி நவீன் சக்கரவர்த்தி அணிந்திருந்த ஒரு பவுன் தங்க நகை பறித்தனர்.‌ 20 ஆயிரம் ரூபாய் கூகுள் பே மூலம் பெற்றனர்.

மேலும் அவரது அவர் வைத்திருந்த செல்போனையும் பறித்தனர். இது தொடர்பாக நவீன் சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். மூன்று பேரும் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *