உடல் கருகி போச்சு உசுரு வாழ உதவி பண்ணுங்க…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் செல்வபுரம் முத்துசாமி காலனியை சேர்ந்த சாந்தி (25) என்பவர் புகார் மனுவில், ” எனக்கு திருமணமாகி விட்டது. 2 குழந்தைகள் உள்ளனர். 4 ஆண்டிற்கு முன் என் கணவர் இறந்து விட்டார். நான் நிறுவனத்தில் வேலை செய்த போது தீ விபத்தில் என உடல் முழுவதும் கருகி போய் விட்டது.

தோல் உரிந்து என்னால் வெளியே நடமாட முடியாத நிலையிருக்கிறது. என்னையும் என் குழந்தைகளையும் காப்பற்ற முடியாமல்’ தவிக்கிறேன் எந்த ஆதரவும் இல்லாமல் நான் தவிக்கிறேன். வீடு இருந்தால், எதாவது வேலை செய்து நான் பிழைத்து கொள்வேன் எனக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக வீடு வழங்க வேண்டும். “என தெரிவித்தார். தனது உடல் நிலையை நினைத்து அவர் கண்ணீர் விட்டு கதறியபடி உதவி கேட்டார்.

வால்பாறை அண்ணா நகரை சேர்ந்த சுபா (30) என்பவர் அளித்த புகார் மனுவில், “எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். என் கணவர் இறந்து விட்டார். நான் சத்துணவு சமையல் உதவியாளர் பணிக்கு விதவைகளுக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பம் தந்தேன் என்னை போல் மேலும் 4 பேர் விண்ணப்பித்தனர்.

ஆனால் என் விண்ணப்பத்தை யாரும் ஏற்கவில்லை. என்னிடம் 1.50 லட்ச ரூபாய் கேட்ட போது என்னால் தர முடியாது எனக்கூறி விட்டேன். எனவே என் விண்ணப்பத்தை ஏற்காமல் நிராகரித்து விட்டார்கள், வறுமையால் நான் தவித்து வருகின்றனர். 10 மற்றும் 7 வயது மகனை வைத்து கஷ்டப்படுகிறேன். என் விண்ணப்பத்தை ஏற்காமல் வேலை கிடைக்காமல் தடுத்து விட்டார்கள் எனக்கு வேலை வழங்க உதவி செய்ய வேண்டும் என கேட்டு அவர் அதிகாரிகள் முன் கதறி அழுதார்.

ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுதா (49) என்பவர், “நான் 85 லட்ச ரூபாயில் தவணை முறையில் கார் வாங்கி எனது மருமகனுக்கு தந்தேன். அவர் காரை வாங்கி மோசடியாக வேறு ஒரு நபருக்கு தந்து விட்டார். என்னால் தவணை தொகை கட்ட முடியவில்லை. என் மருமகன் தவணை தொகை செலுத்துவதில்லை. நான் கார் வாங்கிய நிறுவனத்தினர் தவணை தொகை கேட்டு மிரட்டுகிறார்கள் எனது கார் எங்கே என எனக்கு தெரியவில்லை.

காரை மீட்டு தர வேண்டும். “எனக்கூறி அவர் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதார். தெலுங்குபாளையம் ஜெயலட்சுமி நகர் பகுதி ஐஸ்வர்யா தனது கணவர் இறந்து விட்டார். அவர் மாநகராட்சியில் துப்புரவு பணி செய்து வந்தார். அந்த பணியை எனக்கு கருணை அடிப்படை வழங்க வேண்டும் என கேட்டிருந்தார். இதேபோல் தனது தந்தை இறந்து விட்டால் அவரின் துப்புரவு பணியை தனக்கு வாரிசு அடிப்படையில் வழங்க வேண்டும் என அம்மன் குளம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நிவேதா

என்பவர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *