உணவு வேணாம் ஊதியம் வேணும்…கோவை மாநகராட்சி தொழிலாளர்கள் போராட்டம்..

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை மாநகராட்சி சார்பில் தினமும் வழங்கப்படும் காலை உணவு வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அப்போது அவர்கள் கூறுகையில்,” எங்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும். உணவை கொடுத்து வேலை செய்யுங்கள் என சொன்னால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் . நீங்கள் முறையான ஊதியம் கொடுத்தால் நாங்கள் வாழ முடியும். எங்கள் குடும்பம் வாழ முடியும் . வெறும் உணவுக்காக மட்டும் காலையில் வேலைக்கு வாருங்கள் என கூறுவது சரியல்ல. தமிழக அரசிடம் பலமுறை நாங்கள் வலியுறுத்தியும் போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை‌.

எனவே உரிய ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை மாநகராட்சி தரும் காலை உணவை சாப்பிட மாட்டோம் ,”என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *