ஊருக்குள் உலாவுது சிறுத்தை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது .இதில் மாற்றுத்திறனாளியான தெய்வானை (40) என்பவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், எனக்கு திருமணம் ஆகி கணவர் இருக்கிறார். எங்களுக்கு சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் திண்ணையில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.

மலுமிச்சம்பட்டி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாற்று திறனாளி வேல்முருகன் (37) அளித்த மனுவில், “எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் பெட்டி கடை நடத்தி வருகிறேன். போதுமான வருமானம் இன்றி வறுமை நிலையில் குடும்பம் இருக்கிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கிறேன். ஆனால் இதுவரை வேலை கிடைக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் எதாவது கூலி வேலை ஒதுக்கி தர வேண்டும். தனியார் நிறுவனத்தில் என் ஊனத்தை காட்டி வேலை தர மறுக்கிறார்கள், “என்றார்.

தமிழக வெற்றி கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் மாநகராட்சி வார்டுகளின் எண்ணிக்கை குளறுபடியாக இருக்கிறது. குறிப்பாக சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் வார்டுகளின் எண்கள் முழுவதுமாக பழைய வார்டுகளின் அடிப்படையில் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நடக்கிறது இந்த பணி முடிந்து விரைவில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் பட்டியில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். “என தெரிவித்துள்ளனர்

இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில், குலூர், ராவுத்தூர் பிரிவு, ஒண்டிப்புதூர் கண்ணம்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. சிறுத்தை இரவு நேரங்களில் ரோட்டிலும் பொது இடங்களிலும் சுற்றிக் கொணடிருக்கிறது. பொதுமக்களின் வீடுகளில் கடைகளில் சிறுத்தை சுற்றி வரும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. சிறுத்தை பல்வேறு பகுதியில் விலங்குகளை வேட்டையாடி வருவதாக தெரிகிறது. ஆனால் இதுவரை அந்த சிறுத்தையை பிடிக்க எந்த முயற்சியும் யாரும் எடுக்கவில்லை, வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக சிறுத்தையை பிடித்து வனத்துக்குள் விட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை இருக்கிறது. ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் தவிக்கின்றனர். இனியும் அலட்சியம் காட்டாமல் கூண்டு வைத்தோ அல்லது ஊசி போட்டோ சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் முன் வர வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *