திமுக மறுபடியும் ஜெயிக்குமா.. மகளிர் குழு சர்வே

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்காக தமிழக அரசின் நலத்திட்டங்களில் மக்களை கவர்ந்தது எது என்பது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் விரைவில் நடக்க உள்ளது.

இதற்கான கணக்கெடுப்பு செயலி பயன்படுத்தும் முறை தொடர்பான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்களுக்கு வீடு வீடாக சென்று எப்படி கேள்வி கேட்பது என்ன மாதிரி திட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரிப்பது என்பது தொடர்பான பயிற்சி விளக்கம் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கல்வி , மருத்துவம், சிறு குறு , நடுத்தர தொழில்கள் துறை உள்பட பல்வேறு துறைகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட கேள்விகள் இடம் பெற்றுள்ளது .

மேலும் வரும் 2030 ஆம் ஆண்டில் தங்களுக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பது தொடர்பான 10 சிறப்பு கேள்விகளும் இடம் பெற்றுள்ளது. மகளிர் உரிமைத்தொகை, இலவச வீடு ,மாற்றுத்திறனாளிகள் உதவி ,கல்வி மருத்துவ உதவி போன்ற கேள்விகள் இதில் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. மாநில அளவில் இதுபோன்ற சர்வே பணி நடக்க இருக்கிறது.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பொது மக்களின் குறிப்பாக பெண்களின் மனதை கவர்ந்த விஷயங்களை அறிந்து கொள்ள திமுக இந்த திட்டங்களை மகளிர் சுய உதவி குழு மூலமாக அறிந்து தீவிரம் காட்டியிருப்பதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை , இலவச பஸ் பயணம் எந்தளவுக்கு ஓட்டு வாங்கித் தரும் என்பதை அறிந்து கொள்ள இந்த சர்வே உதவியாக இருக்கும் என பல்ஸ் பார்க்க திமுக அரசு தீவிரம் கட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சர்வே பணிக்கான நிதி ஒதுக்கீடு தமிழக சமூக நலத்தலின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *