என்ன ஹிந்தில பேசுறாரு.. புரியாமல் தவித்த பாஜக தொண்டர்கள் ‌. ‌..

கோவை
பா.ஜனதா சிங்காநல்லூர் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் சிங்காநல்லூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அப்போது அவர்

பா.ஜனதாவில் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினர் கூட கட்சியின் தலைவராக முடியும். இங்கே பூத் கமிட்டி சக்தி கேந்திரா மண்டல் தலைவர் மாவட்ட தலைவர் மாநில தலைவர் இவர்களுடன் தேசிய தலைவராக நானும் நிற்கிறேன். இந்த கட்சியில் மட்டுமே இந்த ஒருங்கிணைப்பு ஒற்றுமையை பார்க்க முடியும்.

தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சினை, சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் போராட்டம், சக்தி கேந்திரம் அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 90 நாட்கள் மட்டுமே உள்ளது. எனவே பூத் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நமது கட்சிக்கு தேவையான ஆட்களை அழைத்து வர வேண்டும். திமுக ஆட்சியை அகற்ற பாடுபட வேண்டும்.


நாட்டின் வளர்ச்சிக்காக 24 மணி நேரமும் பிரதமர் மோடி உழைத்து வருகிறார். மகளிர் ஒன்றிணைந்து கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார். தொடர்ந்து அவர் ஹிந்தியில் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற யாருக்கும் அவர் பேசியது புரியவில்லை. மொழிபெயர்ப்பு செய்தும் போதுமான விவரங்கள் தெரியாமல் பூத் கமிட்டினர் புலம்பியபடி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *