எஸ்ஐஆர் படிவம் சந்தேகமா.. ஆபீஸர் செல் நம்பரில் பேசுங்க
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடக்கிறது. வரும் 11ம் தேதி வரை பணிகள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர்கள் தாங்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஓட்டு சாவடி நிலை அலுவலர் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், வாக்காளர்களுக்கு தங்களது ஓட்டு சாவடி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய சட்டமன்ற தொகுதி வாரியாக உதவி மையங்கள் வெளியிடப்பட்டுள்ளது
. நேற்று முதல் இந்த உதவி மையங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. வரும் 10ம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் பதிவு அலுவலர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம்.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதனை 94450 00245 என்ற செல்போன் எண்ணிலும், சூலூர் தொகுதிக்கு நகர்ப்புற நிலவரி உதவி கமிஷனர் ஜெகநாதனை 82200 46199 என்ற செல்போன் எண்ணிலும், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு ஆர்டீஓ ராமகிருஷ்ணனை 93235 50751 என்ற செல்போன் எண்ணிலும், கோவை வடக்கு தொகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் வாணிலட்சுமி ஜெகதாம்பாளை 99449 31659 என்ற செல்போன் எண்ணிலும், தொண்டாமுத்தூர் தொகுதிக்கு தெற்கு ஆர்டீஒ மாருதிபிரியாவை 94450 00442 என்ற செல்போன் எண்ணிலும், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசனை 94437 77666 என்ற செல்போன் எண்ணிலும், சிங்காநல்லூர் தொகுதிக்கு துணை கமிஷனர் சுல்தானாவை 741 89 20777 என்ற செல்போன் எண்ணிலும், கிணத்துக்கடவு தொகுதிக்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சங்கீதாவை 94454 77853 என்ற செல்போன் எண்ணிலும், பொள்ளாச்சி தொகுதிக்கு சப் கலெக்டர் ராமகிருஷ்ணசாமியை 94450 00445 என்ற செல்போன் எண்ணிலும், வால்பாறை தொகுதிக்கு மாவட்ட ஆய்வு குழு அலுவலர் பாபுவை 93602 59018 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு தகவல்களை பெறலாம். படிவம் தராதவர்கள் விரைவாக படிவங்களை ஒப்படைக்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
