எஸ்பி வேலுமணியின் ‘வலது கரம்’ இன்ஜினியர் சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில்..!

கோவை மாவட்டத்தில் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்தவர் இன்ஜினியர் சந்திரசேகர். வடவள்ளி மற்றும் வடக்கு தொகுதி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எளிதில் அணுகும் நபராக காணப்பட்டார். பல்வேறு அரசு திட்ட பணியை செய்வதற்கு உதவியாக இருந்துள்ளார்.
இவர் புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராகவும்
பின்னர் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு இவர் கட்சியில் இருந்து விலகினார். இந்த நிலையில் இவர் கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்து அவரிடம் வாழ்த்து பெற்றார். அப்போது எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் , பிஆர்ஜி அருண்குமார் உள்பட பல்வேறு நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இன்ஜினியர் சந்திரசேகர் அதிமுகவில் தீவிரமாக பணியாற்றுவார் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
