எஸ் ஐ ஆர் வேலை ரொம்ப வேகமா போகுதுங்க..
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் (எஸ்ஐஆர்) நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 3117 ஓட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர் பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் நடக்கிறது.
வரும் டிசம்பர் 4ம் தேதி வரை வீடு தோறும் சென்று பட்டியல் காண்பித்து தேவையான வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெறுதல் போன்ற பணிகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெரும்பாளான பிஎல்ஒக்கள் கொடுத்த விண்ணப்ப படிவங்களை திரும்ப பெறும் பணிகளை முடிக்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சுருக்க திருத்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பொதுமக்களில் சிலர் குறிப்பாக படிக்காத வயதானவர்கள் படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர். தேவையான உதவிகளை செய்து படிவம் பூர்த்தி செய்து பெற வேண்டும். படிவங்களை பெறாமல் அப்படியே விட்டு விடக்கூடாத 100 சதவீதம் இந்த பணிகளை முடித்து தர வேண்டும் என உத்தரவிட்டது.
கோவை மாநகராட்சியில் 100 வார்டில் வாக்காளர் படிவம் பெற 200 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்களில் வீடு வீடாக சென்று பூரத்தி செய்த வாக்காளர் விண்ணப்ப படிவங்களை திரும்ப பெறும் பணி வேகமாக நடந்தது. மாவட்ட அளவில் 200க்கும் மேற்பட் பிஎல்லுக்கள் 90 சதவீதம் அளவை தாண்டி விண்ணப்ப படிவங்களை திரும்ப பெற்று பட்டியலில் சேர்த்து விட்டனர். 5 பேர் முழுமையாக பணிகளை முடித்து பாராட்டு பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் எஸ்ஐஆர் படிவங்களை பெற முழு அளவில் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் பல்வேறு பகுதிகளுக்கு அதிரடியாக விசிட் செய்து படினம் பெறுதல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
மாவட்ட அளவில் எஸ்ஐஆர் பணிகள் 75 சதவீதம் அளவை எட்டி விட்டது. இன்னும் 5 நாட்களில் மொத்த பணிகளையும் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் கால கெடுவுக்குள் பணிகள் முடிக்க தேவையான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
