ஓட்டு சின்னம் எல்லாம் அழிக்கிறாங்க
கோவை மாவட்டத்தில் 19523 ஓட்டு மிஷின்கள் கட்டுப்பாட்டு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓட்டு மிஷின்களில் பதிவாகியுள்ள ஓட்டுக்கள் சின்னங்கள் இதர தகவல் அனைத்தும் அழிக்கும் பணி இன்று துவங்கியுள்ளது.
ரீ செட்டிங் என்ற பெயரில் மொத்த தகவல்களும் நீக்கம் செய்யப்படும். வரும் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தும் வகையில் இந்த ஓட்டு மிஷின்கள் தற்போது மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. 40 நாளில் இந்த பணிகள் முடியும்.
