ஓட்டு போடறது எப்படிங்க..? டெமோ மிஷன் வருதுங்க..

கோவை மாவட்டத்தில் வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக சட்டமன்ற தேர்தலுக்காக 5463 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்களுக்கு ஓட்டு போட பயிற்சி வழங்கவேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்தது.

தற்போது ஓட்டு மெசின்கள் சரி பார்ப்பு பணி முடிந்தது. இதில் பயன்படுத்தும் நிலையில் 19,117 மெசின்கள் இருப்பதும், பழுதான நிலையில் 397 மெசின்கள் இருப்பதும் தெரியவந்தது. இவை அனைத்தும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் நல்ல நிலையில் உள்ள 300 மெசின்கள் இன்று தாலூகா அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும்.

பொது இடங்களில் வைத்து, ஓட்டு போட அதிகாரிகள் பயிற்சி தருவார்கள். பட்டனை அழுத்துவது, விவி பேட் கருவியில் சின்னம் வருகிறதா என பார்ப்பது, பீப் சத்தம் கேட்கிறதா, கவுண்டிங் மெசின் முறையாக இயங்குகிறதா என வாக்காளர்கள் டெமோ செய்து பார்க்கலாம். ஒரு மாதம் டெமோ பார்த்த பின்னர் ஓட்டு பதிவு நாளில் தெளிவாக ஓட்டு போடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *