கற்கால மனிதர்களின் கல் ஆயுதங்கள்..
கற்கால மனிதர்களின் ஆயுதம் கற்கள் என்பது அனைவரும் அறிந்தது தான் ஆனால் அந்த கற்களின் வகைகள் ஆயுதம் தயாரித்த விதம் பலருக்கு தெரியாது பழைய கற்காலத்தின் இறுதியில் அகேட் சால்சிடோனி செர்ட் கார்னீலியன் ஜழஸ்பர். ஆப்சீடியன் குவார்ட்ஸ் ஸ் கற்கள் தான் ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன.
இந்த கற்கள் கைப்பிடியுடன் அமைந்திருந்தன. சில கற்களை கொடுவாளாகவும் சுத்தியாகவும். குத்தீட்டியாகவும் பயன்படுத்தினர். கற்கால கருவிகள் பிளேட் ப்யூரின் லூனேட் முக்கோணத்தில் இருந்தன இந்த கருவிகள் கி மு 10 ஆயிரம் ஆண்டில் தயாரிக்கப்பட்டவை. இந்த கற்கள் அவினாசி, அன்னூர், கரூர், சூலூர் பேரூர் உள்ளிட்ட கொங்கு வட்டார ஊர்களில் கிடைத்தன.
சில வகை கூலாங்கற்கள் குறித்த விவரங்கள் புதிய கற்கால மக்களுக்கு தெரியவில்லை. தொல்லியல் ஆய்வுகளில் பழைய கற்கற்காலம் புதிய கற்காலம் இடை கற்காலத்தில் பயன்படுத்திய கற்கள் கிடைத்துள்ளன. காலத்திற்கு ஏற்ப கற்களின் வகைகளும் மாறுபட்டு இருந்தது தொல்லியல் ஆய்வில் கண்டறியப்பட்டது.
விலங்குகளை தாக்கி விரட்ட கூலங்கல், கூர் கற்கள் பயன்படுத்தினர் . மான் வரையாடு காட்டு பன்றிகளை குத்தி வேட்டைகளுக்காக மட்டுமே ஆயுத கற்கள் பயன்பாடு இருந்தது. புலி சிறுத்தை, கரடி காட்டெருமை போன்ற வேட்டை கொல்ல குத்தீட்டி கற்கள் கிழிப்பு கற்கள் பயன்படுத்தப்பட்டன. கழுத்து கால் வயிறுகளை கிழிக்க பயன்படுத்தினர்.
பழைய புதிய கற்காலத்தில் கைக்கோடாரிகள் அதிகளவு பயன்பாட்டில் இருந்தது. சிலர் ஆட்ஸ் என அழைக்கப்படும் செலுக்கு கைப்பிடியுடன் கூடிய கோடாரி கற்கள் விலங்குகளின் மார்பு கற்களையும் பயன்படுத்தியுள்ளனர்.
வழவழப்பான சொர சொரப்பான கற்கள் இறைச்சியை துண்டிக்க பயன்படுத்தப்பட்டன. கோடாரி கற்களுக்கு மாற்றாக விலங்கு ஆயுதமாக புதிய கற்காலத்தில் எலும்புகள் மரம் வேறின் பாகங்கள் ஆய்தங்களாக மாறியது. குறிப்பாக மூங்கில் மரங்கள் முக்கிய வேட்டை ஆயுதமாக மாறியது .
இந்த ஆயுதங்கள் கிடைத்த பின்னரே வேட்டை விலங்குகளை மனிதர்கள் அடிமைப்படுத்த துவங்கினர் . சில வகை விலங்குகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினர். மூங்கில் காலத்தில் தான் அம்பு வில் போன்ற ஆயுதங்கள் வந்த பின்னரே மனிதர்களுக்கு மோதல் போர் போன்றவை ஏற்பட்டதாக தெரிகிறது.
கொங்கு வட்டாரத்தின் பழங்குடியின் மக்கள் ஆதி கால ஆயுதமான கற்களுக்கு முதல் மரியாதை வழங்கி வணங்கிவருகின்றனர்.
