காட்டூர் கடையை சாம்பலாகிய வெல்டிங் ..

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதி ஆட்டோ மொபைல் கடை மற்றும் குடோன் நேற்று தீ பிடித்தது. இதனால் கோவை நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்த கோர தீ விபத்தின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

மூன்று தளங்கள் கொண்ட இந்த கடையில் மேல் தளத்தில் எலிவேஷன் ஃபைபர் அமைக்க வெல்டிங் பணி நடத்தப்பட்டு இருக்கிறது. ‌ பணி முடிந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு தீ பரவி உளளது. வெல்டிங் மூலமாக விழுந்த தீக்கனல் அந்தப் பகுதியில் உள்ள ஆயில் கேன் மீது விழுந்து அதன் பின்னர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகி இருக்கிறது. இந்தக் கடை கட்டிடம் மட்டுமின்றி அருகில் இருந்த ஆறு கடைகளும் சேதமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *