காலை மிதித்த தொழிலாளியை கழுத்தில் குத்தி கொன்ற கும்பல்..
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார் (23). இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிலருடன் மலுமிச்சம்பட்டி கணபதி நகரில் தங்கி சிட்கோவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலிவேலை செய்து வந்தார்.
நேற்று அனைவரும் அறையில் அமர்ந்து மது அருந்தினர் . அப்போது போதையில் இருந்த ஒருவர் தவறுதலாக ராகேஷ்குமாரின் காலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதில் ஆத்திரம் அடைந்த ராகேஷ்குமாரின் நண்பர்கள் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து ராகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினர் . இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராகேஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 6 பேரை பிடித்து விசாரித்தனர்.
