காவி மயம் ஆகிறது போத்தனூர் ரயில் நிலையம்..!
கோவை மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் பழமையான ரயில் நிலையமாக போத்தனூர் ரயில் நிலையம் உள்ளது. கோவை ரயில் நிலையம் துவங்கும் முன்பு போத்தனூர் ரயில் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.
தற்போது போத்தனூரில் ரயில் நிலையத்தை 100 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையத்தில் பிட் லைன் மற்றும் ரயில் பாதை விரிவாக்கம் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில் மஞ்சள் கலந்த வெளிர் பச்சை நிற வண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்த வண்ணத்தை மாற்றி அதற்கு பதிலாக காவி நிறத்தில் முகப்பு வளாகம் வண்ணம் பூசும் பணி நடக்கிறது.
ரயில் நிலையம் முழுவதும் காவி கலராக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. போத்தனூரில் இருந்து தான்பாத் வரை இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலும் காவி நிறத்தில் காணப்பட்டது.
மத்திய அரசு தனது முக்கிய திட்டங்களை மக்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் போது அதற்கு காவி நிறம் வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பும் காட்டி வருகின்றனர்.
