கோவையில் அம்மா சிலையை மறைத்து அதிமுக நிர்வாகிகள் அசத்தல் போஸ்..!
கோவை ஓசூர் ரோடு இதய தெய்வம் அணியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம் , முன்னாள் அமைச்சர் செ ம வேலுச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் அவிநாசி ரோடு அண்ணா சிலை பகுதியில் உள்ள ஜெயலலிதா முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் முதல்வர் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் கொடுத்த பெரும்பாலான மாலைகளையும் எம் எல் ஏ அம்மன் அர்ஜுனன் வாங்கி தானே அணிவித்தார். ஓரிரு மாலைகளை செம வேலுச்சாமி மற்றும் கே ஆர் ஜெயராம் ஆகியோர் அணிவித்தனர்.
ஜெயலலிதா சிலை முகம் மறைத்து கொண்டதால் தொண்டர்கள் போட்டோ எடுக்க முடியாமல் தவித்தனர்.
