கோவையில் இரு சக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தல்..!
அரிசி மூட்டைகள் ஏற்றிய வாகனத்தை ஓட்டி செல்ல தயாரான வாலிபர்..
கோவை குளத்து பாளையம் பகுதியில் உள்ள மகளிர் குழுவினர் நடத்தும் ரேஷன் கடையில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி முறைகேடாக கடத்தப்பட்டு வருவதாக ஒரு தாய் மக்கள் கட்சி சார்பில் கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் பிரிவு அலுவலருக்கு புகார் மனு தரப்பட்டது.
கடந்த மூன்று மாதமாக இரு சக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் பல்வேறு பொருட்களை கடத்தி வருகிறார் . ரேஷன் கடையிலிருந்து நேரடியாக இந்த பொருட்களை பெறுகிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இனியும் கடத்தல் நடக்க கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஃபோட்டோ மட்டும் வீடியோ ஆதாரங்களையும் அனுப்பியுள்ளனர். ரேஷன் கடைகளில் நடக்கும் இந்த வெளிப்படையான திருட்டு பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
