கோவையில் இளம் பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. வாலிபர் மீது வழக்கு

கோவையைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவையில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பட்டப்படிப்பு படித்தார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வந்த நந்தகுமார் (24) என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.

நந்தகுமார் மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த மாணவி அதை ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து நந்தகுமார் அவரை காதலிப்பதாக டார்ச்சர் செய்து வந்தார். இதில் கடுப்பான மாணவி பல்கலைக்கழக டீன் அலுவலகத்தில் புகார் செய்தார். நந்தகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவரை வகுப்புக்கு வர தடை விதித்து. தேர்வு எழுத மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து 2025ம் ஆண்டு வரை நந்தகுமார் இளம்பெண்ணை தொந்தரவு செய்யாமல் இருந்துள்ளார். இதற்கிடையே பட்டப்படிப்பு படித்து முடித்ததும் தனியார் நிறுவனத்தில் இளம்பெண் வேலைக்கு சேர்ந்து உள்ளதை அறிந்த நந்தகுமார் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு காதல் தொல்லை கொடுத்து உள்ளார் .

அதிர்ச்சி அடைந்த இளம் பெண் தனது செல்போன் எண் மற்றும் சமூக வலைதள பக்க ஐடி முகவரி அனைத்தையும் மாற்றியுள்ளார் ஆனாலும், நண்பர்கள் உதவியுடன் நந்தகுமார் இளம்பெண்ணின் புதிய செல்போன் நம்பர் மற்றும் இன்ஸ்டாகிராம் முகவரியை தெரிந்து கொண்டு மீண்டும் தொடர்பு கொண்டு உள்ளார்.

அதோடு அவரது இன்ஸ்டாகிராமிற்கு தவறான மெசேஜ் அனுப்புவது, ஆபாச படங்களை அனுப்புவது என்று தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்.

இதை பார்ந்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் இதைத்தொடர்ந்து போலீசார் நந்தகுமார் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *