கோவையில் ஓடும் பஸ்ஸில் 5.20 லட்ச ரூபாய் திருட்டு..
கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டிருந்தார் . வீடு கட்டுவதற்கு பணம் தேவைப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சென்று மனைவியின் தங்க நகைகளை அடமானம் வைத்து 5.20 லட்ச ரூபாய் வாங்கினார் .
அந்த பணத்துடன் சிவகங்கை மாவட்டத்திலிருந்து இரவு நேரத்தில் ஆம்னி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தார். பஸ்ஸின் மேல் பகுதியில் இருந்த ரேக்கில் பெட்டியை வைத்து கீழே படுத்து தூங்கி வட்டார். அதிகாலை எழுந்து பார்த்தபோது பெட்டி பெவிக்கால் போட்டு மூடப்பட்டிருந்தது .
அதிர்ச்சி அடைந்த ரவி கத்தி வாங்கி அதை திறந்து பார்த்தார் . அப்போது பெட்டிக்குள் இருந்த பணம் முழுவதையும் திருடர்கள் எடுத்துக் கண்டே நூதனமாக ஃபெவிக்கால் போட்டு மூடி இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ரவி காட்டூர் போலீசில் புகார் அளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
