கோவையில் கல் குவாரி டெண்டரில் முறைகேடு: எம் எல் ஏ பொள்ளாச்சி ஜெயராமன் புகார்
கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணனிடம் புகார் மனு அளித்த அதிமுகவினர்..
பொள்ளாச்சி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகி கிருஷ்ணகுமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார் மனு ஒன்று வழங்கினர்.
அதில் கோவை மாவட்டம் கேரளா எல்லையில் இரண்டு கல் குவாரி களுக்கு ஆன்லைன் மூலமாக ஏலம் விடப்பட்டது. ஆனால் இதில் அமைச்சர் ஒருவரின் அழுத்தம் காரணமாக அவரது ஆதரவு நபருக்கு மட்டும் டெண்டர் வழங்க வேண்டும். வேறு யாரும் டெண்டர் போட வேண்டாம் என நெருக்கடி கொடுத்து தடுத்து விட்டார்கள்.
தேர்தல் வரும் நேரத்தில் கடைசி நேர முறைகேடு செய்ய இவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். எனவே இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
இதை மாவட்ட நிர்வாகம் கனிம வளத்துறை தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இது தவிர புரவிபாளையம் பகுதியில் ஒரு பெண்ணின் பெயரில் 100 ஏக்கர் நிலம் வாங்கி அதில் 20 ஏக்கரில் கல் குவாரி அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. விவசாய நிலம் மற்றும் மக்கள் குடியிருப்பு இருக்கும் பகுதியில் தினமும் 1000 லோடு ஜல்லி கற்கள் முறைகேடாக கேரளாவுக்கு கடத்தும் வகையில் இந்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பகுதியில் தனியார் மதுபான கடை திறப்பதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கடைசி நேரமாக இது போன்ற முறைகேடுகளை செய்ய முயற்சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
