கோவையில் குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் வாங்கிய இரண்டு பேர் கைது

லஞ்சம் வாங்கி கைதான மோகன்

கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் அதிகளவு பெறப்பட்டு வருகிறது. மாநகராட்சி பிரதான அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் குடிநீர் இணைப்பு கேட்டு பொதுமக்கள் விண்ணப்பித்தால் அதற்கு அதிகாரிகள் , குடிநீர் வழங்கல் பிரிவினர் பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தொடர்ந்து புகார் சென்றது . இன்று காந்தி பார்க் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பு லஞ்சம் கேட்ட குழாய் ஆய்வாளர் மற்றும் குடிநீர் குழாய் பராமரிப்பாளர் ஆகியோர் மீது புகார் தரப்பட்டது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீ சார் கொடுத்த ஆலோசனைபடி புகார்தாரர் ஐந்தாயிரம் ரூபாய் ரசாயன மை தடவிய ரூபாய் நோட்டை குடிநீர் குழாய் ஆய்வாளர் மோகன் மற்றும் பராமரிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோரிடம் கொடுத்தார்.

இதை தொடர்ந்து போலீசார் லஞ்சம் வாங்கிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இரண்டு பேரையும் சஸ்பெண்ட் செய்ய கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *