கோவையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்கள் நடை அடைப்பு..

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் முக்கிய கோயில்கள் இன்று நடை சாத்தப்பட்டது.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், கோனியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோயில், பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோயில் , லட்சுமி நரசிம்மர் கோயில்

கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் ,புலியகுளம் விநாயகர் கோவில் , அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் பெரும்பாலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்கள் மற்றும் தனியார் கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் நடை சாத்தப்பட்டது.

முன்னதாக கோயில்களில் தோச நிவர்த்தி பூஜை நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் பரணி, மகம், பூராடம், பூரம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திர கிரகண தோஷ பரிகாரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


சந்திர கிரகணத்தை முன்னிட்டு முக்கிய கோயில்களில் குறிப்பாக முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படவில்லை. கோனியம்மன் கோயில் தேர் திருவிழா நாளை நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது.

கூட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் நடை சாத்தப்பட்டது. சந்திரனும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் செல்லும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் இந்த கிரகணம் ஏற்படுவதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *