கோவையில் சூப்பர் பாஸ்ட் விபத்து; கார் பைக் காலி..!

கோவை அவிநாசி ரோடு பீளமேடு வரதராஜா மில் பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று நள்ளிரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சென்ற இந்த கார் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. நிலை தடுமாறி அருகில் சென்ற பைக் மீது மோதியது.

இதில் கார் மற்றும் பைக் நொறுங்கி போனது. பெட்ரோல் கசிவு ஏற்பட்ட நிலையில் கார் மற்றும் பைக் தீ பிடித்தது. இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் இருந்த இரண்டு பேர் பலத்த காயமடைந்தனர். பைக்கில் சென்ற வாலிபருக்கும் காயம் ஏற்பட்டது. மூன்று பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரில் வந்த நபர் கள் போதையில் இருந்தார்களா என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவையில் நள்ளிரவு நேரத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்வது அதிகமாகி வருகிறது. சிலர் போதையில் அருகில் செல்லும் வாகனங்கள் மட்டுமின்றி தடுப்பு சுவர் மற்றும் மரங்களின் மீதும் மோதி விபத்து ஏற்படுத்திய வருவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் ட்ரங் அண்ட் டிரைவிங் சோதனையை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *