கோவையில் ஜாலி வாக்கிங் வந்த யானை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தென்றல் நகர் பகுதியில் இன்று இரவு பெண் யானை ஒன்று சுற்றிக் கொண்டிருந்தது. குடியிருப்பு பகுதியில் தண்ணீர் மற்றும் உணவு தேடி இந்த யானை சுற்றியது.

வீட்டின் முன்பு இருந்த வாழைமரம் மற்றும் தென்னை மரத்தின் மட்டைகளை சாய்த்து ருசித்து சாப்பிட்டது . பொதுமக்கள் சத்தம் போட்டு விரட்டிய போது

அதை கண்டு கண்டுகொள்ளாமல் யானை மெதுவாக வீதிகளில் சுற்றிக் கொண்டிருந்தது. இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர் அங்கே சென்று பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றனர் . ஆனால் யானை வெகு நேரம் குடியிருப்பு பகுதியிலேயே உலா வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தவிப்படைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *