கோவையில் ஜிடி நாயுடு சிலை திறந்தார் தமிழக முதல்வர்..!

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள்,

தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள். நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் இயந்திரவியல் மற்றும் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியவரும் கல்வியாளராகவும். எளியோருக்கு உதவும் நற்குணம் வாய்ந்தவராகவும் விளங்கிய கோவையை சேர்ந்த மறைந்த ஜி.டி. நாயுடுவிற்கு சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

, அவினாசி பிரதான சாலையில் உள்ள வ.உ.சி. பூங்காவில் 50 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன்,

ஜி.டி. நாயுடு மகன் ஜி.டி. கோபால், அவரது மனைவி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *