கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்..! எப்எல் பார்கள் திறப்பு

கோவை மாவட்டத்தில் 298 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் பணி வரன்முறை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளை பணியை புறக்கணித்து போராட்டம் நடத்துவோம் டாஸ்மாக் மதுபான கடையை திறக்க மாட்டோம் என ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவையில் மட்டுமல்ல மாநில அளவில் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை மூடப்பட உள்ளது.

இந்த நிலைமையில் மாநில அளவில் 11 டூ 11 என்ற fl2 , fl3 போன்ற மன மகிழ் மன்றம் ஹோட்டல் உரிமம் தனியார் பார்களின் மூலமாக மது விற்பனையை நடத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சங்க கோவை மாவட்ட தலைவர் ஜான் அந்தோணி கூறியதாவது;
எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த இருக்கிறோம் .தமிழக அரசு உடனே எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் . நாங்கள் போராட்டம் நடத்தும் போது தனியார் மதுபான நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் வாய்ப்புள்ளது. கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் தனியார் மதுபானங்கள் அதிகமாக செயல்பட்டு வருகிறது. அங்கே விற்பனை தொடர்ந்து அதிகரிக்கும் என நினைக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *