கோவையில் துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடு நடக்கிறது. தேர்தல் பணிக்காக துணை ராணுவ படையான சிஆர்பிஎப் வீரர்கள் வெளி மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

இவர்கள் வெள்ளலூரில் சிஆர்பிஎப் வளாகத்தில் தங்கியுள்ளனர். நேற்று துணை ராணுவ படையினர் 144 பேர் தேர்தலுக்கான கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு சுந்தராபுரம் சங்கம் வீதியில் துவங்கி சாரதா மில் ரோடு, போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் வரை 2.7 கி.மீ தூரம் நடந்தது.

இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன், சிஆர்பிஎப் துணை தளவாய் சோனியா பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆயுதப்படை, உள்ளூர் போலீசாரும் அணிவகுப்பில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *