கோவையில் தொழிற்சாலைகளால் நச்சுப் புகை, நாற்றம்: கலெக்டர் அலுவலகத்தில் புகார்..!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த கணினி ஆசிரியர்கள் உரிமை சங்கத்தை சேர்ந்த பட்டதாரி பெண்கள் புகார் மனு அளித்தனர். அதில், “தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கொண்டு வர வேண்டும்.
தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கான தனி பாடப்புத்தகங்கள் கொண்டு வந்து அதற்கான கனி பாடவேளைகள் ஓதுக்கிட வேண்டும் கணினி பயிற்றுநர் பணியிடங்களை தனியாரிடம் டெண்டர் முறையில் நிரப்பாமல், அரசு நேரடியாக பி.எட் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
மத்திய அரசின் சமர சிக்க்ஷாகிட்டத்தின் கீழ் நடைபெறும் நியமனங்களில் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். கணினி அறிவியல் பாடத்தில் பிஎட் பட்டம் பெற்றவர்களுக்கு பிஇஜ, டிஇஓ போன்ற தேர்வுகளை எழுத அனுமதி வழங்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு. மேற்கண்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவில், “வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் குப்பை துர்நாற்றத்தினால் பொதுமக்கள் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர் தொற்று நோய் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே குப்பை கிடங்கை அகற்ற வேண்டும். போத்தனூரில் இருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் அன்பு நகர்,
அவ்வை நகர, ஜேஜே நகர், வள்ளல் நகர், அம்பேத்கார் நகர் பகுதியில் போதுமான மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் விபத்து மற்றும் பல்வேறு குற்றங்கள் நடக்கிறது. எனவே தெரு மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும். “என தெரிவித்தனர்
கோவை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தி விடுகின்றனர் தங்களது கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்றித் தர வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
அன்னூர் காரேகவுண்டன்பாளையம் அச்சம்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் அளித்த புகார் மனுவில்,
எங்கள் ஊரில் சுமார் 350 குடும்பங்கள் இருக்கிறது. எங்கள் ஊரின் அருகில் பவுண்டரி உணவு நிறுவனங்கள். அலாய் நிறுவனங்கள் இருக்கிறது. இங்கேயிருந்து வெளியே வரும் நச்சுப்புகை துர்நாற்றம், ரசாயனம் கலந்த நுண் கழிவுத்துகள்களால் மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.
குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இரசாயனம் கலந்து நச்சுப்புகை வெளியேறுவதால் சுகாதார பாதிப்பு அபாயம் உள்ளது. இந்த தொழிற்சாலை கழிவுகள் எங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் படிந்து அசுத்தம் ஏற்படுத்தி வருகிறது. இங்கே மாசு வாரியம் ஆய்வு செய்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொழிற்சாலைகளால் மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது, என தெரிவித்தனர்.
