கோவையில் தொழிலாளி அடித்து கொலை: 3 பேர் கைது
பெரியநாயக்கன் பாளைய பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (40). கூலி தொழிலாளி. கடந்த 15 ம் தேதி பெட்டதாரதாபுரம் அண்ணா நகர் காட்டுப்பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது குடித்துள்ளார்.
அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் கட்டையாலும் தாக்கி உள்ளனர்.
அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் செல்போனில் அழைத்து அந்தோணி மயக்கமடைந்து கிடப்பதாக கூறியுள்ளனர். அந்தோணி மனைவி சரண்யா தேவி அவரை ஆஸ்பத்திரி சேர்த்துள்ளார்.
முதலில் அவர்கள் மயக்கம் என்று கூறியதால் அதை நம்பியுள்ளனர். ஆனால் அதன் பிறகு அந்தோணியின் உடலில் முதுகு பகுதி மற்றும் வலது கால் தொடை பகுதியில் அடித்ததற்கான காயங்கள் இருந்துள்ளது.
அதன் பிறகு சிகிச்சை பெற்று பின் வீட்டிற்கு திரும்பிய அந்தோணிக்கு 21ம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இவர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர் அந்தோணியை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்தோணியின் மனைவி சரண்யா தேவி பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்ராஜேஷ் கண்ணன் மேற் சரண்யா தேவி கொடுத்த புகாரின் பேரில் அந்தோணி தாக்கப்பட்ட சம்பவம் கொலை வழக்காக மாற்றம் செய்தார். அந்தோணியை தாக்கிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
