கோவையில் நெஞ்சு வலியில் தவித்தவரை ரோட்டில் விட்டு சென்ற கொடுமை…
கோவை ஆர்.எஸ்புரம் பகுதியில் நேற்று முன் தினம் அரசு பஸ் டவுன்பஸ் சென்ற போது அந்த பஸ்சில் இருந்த சுமார் 60 வயது பயணி ஒருவருக்கு நெஞ்சு வலிஏற்பட்டது . அவர் உட்கார்ந்த சீட்டில் இருந்து பஸ்சிற்குள் விழுந்தார். வாயில் நுரை தள்ள அவர் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இந்த நிலையில் பஸ் டிரைவர், கண்டக்டர் பஸ்சை நிறுத்தி அவரை பஸ்சிலிருந்து இறக்கி ரோட்டோரம் படுக்க வைத்து விட்டு சென்று விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக அந்த பஸ்சில் பயணம் செய்த நபர் ஒருவர் புகார் தெரிவித்தார். மேலும் ஆர்எஸ் புரம் பகுதி மக்கள் இலவச சேவை ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிய நபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. பயணியின் உயிரை காக்காமல் பஸ்சை இயக்கிய டிரைவர், கண்டக்டரின் மனிதாபிமானம் இல்லாத செயல் குறித்து புகார் தரப்பட்டது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழகத்தினர், கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்ட நபரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்காமல் எந்த ஆதரவும் இன்றி படுக்க வைத்து செல்ல கூடாது டிரைவர், கண்டக்டர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி வழங்கியும் அவர்கள் பஸ் பயணியை காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இரக்கமின்றி அவர்கள் சென்று விட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். உயிருக்கு போராடும் நபர்களை காக்காமல் அலட்சியம் காட்ட கூடாது என போக்குவரத்து துறையினர் எச்சரித்துள்ளனர்.
