கோவையில் பிணங்களை எரிப்பதில் சிக்கல்..
லேகாவை மாவட்டததில் வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி மயானங்களில் சடலங்களை தகனம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விறகுகள் மூலம் சடலங்களை எரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதியில் 11 மின் மயானங்களில் இறந்தவர்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. மின்சாரம் மற்றும் எல்பிஜி கேஸ் மூலம் இயங்கும் இயற்கை எரிவாயு தகன மேடைகள் இருக்கின்றன. இதன்மூலமாக, இறந்தவர்களின் சடலங்கள் வழக்கமாக எரியூட்டப்பட்டு வருகின்றன.
, தற்போது வர்த்தக சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இயற்கை எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த மையங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே சடலங்களை எரியூட்ட கூடிய அளவிலான சிலிண்டர்கள் கையிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சியில் 11 மின் மயானங்கள் செயல்படுகிறது. இந்த மயானங்களின் மூலமாக ஒரு நாளைக்கு 32 சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. ஒரு சடலத்திற்கு 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் தேவைப்படுகிறது. தற்போது, இருப்பில் உள்ள வர்த்தக சிலிண்டர்களின் மூலம் 3 நாட்களுக்கு சடலங்களை எரிக்க முடியும்.
இதில், தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்சாரம் மூலம் செயல்படும் 3 மின் மயானங்கள் இருக்கின்றன. இதில், கூடுதல் சடலங்கள் எரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, தேவைப்பட்டால் பழைய முறைப்படி விறகுகள் மூலமாக சடலங்களை எரியூட்டப்படும். இதற்கு தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கிறது என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
