கோவையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு இன்று காலை துவங்கியது. 130 மையங்களில் 36 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று தமிழ் மற்றும் மொழி தேர்வு எழுதினர்.

கோவை நகரில் பல்வேறு பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மாணவ மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தேர்வு மையங்களில் செய்யப்பட்டிருக்கிறதா விதிமுறை மீறல் நடந்துள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *