கோவையில் போட்டியா. ..?!செந்தில் பாலாஜி பேட்டி…

கோவை பீளமேடு பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டத்திற்குபின்னர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். திமுகவின் கள்ள ஓட்டுகள் தான் நீக்கப்பட்டு இருக்கிறது என நைனார் நாகேந்திரன் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் நீக்கப்பட்டவர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகளை கொடுப்பது தேர்தல் ஆணையம் என தெரிவித்த அவர், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கின்ற அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது இந்த கள்ள ஒட்டுக்கள் அவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.
அப்பொழுது நல்ல ஓட்டுக்களாக இருந்தது இப்பொழுது கள்ள ஓட்டுக்கள் ஆகிவிட்டதா
தீய சக்தி என விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, பழைய அரசியல் கட்சிகள் என்றாலும் புதிய அரசியல் கட்சிகள் என்றாலும், திமுகவை விமர்சனம் செய்யாமல் அரசியலில் இருக்க முடியாது என்ற சூழல் தமிழகத்தில் இருக்கிறது. விமர்சனம் செய்தால் மட்டுமே அவர்கள் அரசியல் களத்தில் இருக்க முடியும் .
விஜய் திமுகவை விமர்சித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர். மக்களிடத்தில்
வலுவான இயக்கமாக நல் அரசு நடத்தும் இயக்கமாக திமுக இருக்கின்றது என தெரிவித்தார். யாருடைய விமர்சனங்களையும் காது கொடுத்து கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அரசுக்கு நல்ல ஆலோசனை சொல்லும் விமர்சனங்களாக இருந்தால் நிச்சயமாக அதை காது கொடுத்து கேட்டு ஏற்றுக்கொள்வோம் என தெரிவித்தார்..2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி தரும்கோவை தொகுதியில் போட்டியிடப் போவதாக தகவல் பரவுவது குறித்த கேள்விக்கு
சமூக வலைதளங்களில் கோவையில் போட்டியிட போவதாக வந்துள்ளதை நானும் பார்த்தேன். நானும் அதில் தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் என்னை ஜெயிக்க வைத்துக்கொண்டு இருக்கின்றனர் . 5 முறை ஜெயிக்க வைத்திருக்கின்றனர்.
கோவையைப் பொறுத்தவரை எங்களது இலக்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். முதல்வரை தேர்வு செய்வது மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் தீர்மானிக்க முடியாது என தெரிவித்தார். ஒருவரை புகழ்ந்து எழுதுவதால் மாற்றங்களை உருவாக்கி விட முடியாது எனவும் தெரிவித்தார்.
