கோவையில் போதையில் 4 பேர் சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு

கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் மதுபான கடை உள்ளது .இதில் மது வாங்கி குடித்த நான்கு பேர் அதிக போதையில் தள்ளாடி பாதை தெரியாமல் சென்று அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் விழுந்துவிட்டார்கள் .

அதில் இரண்டு பேர் கழிவுநீரில் தலைகீழாக கவிழ்ந்து விட்டார்கள் . இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டனர். இன்னும் இரண்டு பேர் சாக்கடைக்குள் படுத்து உருண்டு தள்ளாடிக் கொண்டே இருந்தனர்.

இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கே சென்று நான்கு பேரையும் மீட்டனர். இவர்களில் இரண்டு பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போதையில் குடி பிரியர்கள் செய்த இந்த அட்டகாசத்தை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்து புலம்பி சென்றனர்.

இப்படி குடிச்சிட்டு இந்த மாதிரி கிடக்கிறாங்க. இவங்க உசுரோட வீடு போவாங்களா என அவர்கள் ஆதங்கத்துடன் பேசி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *