கோவையில் போதை அடாவடி அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு கத்திக்குத்து..!

கோவை சிங்காநல்லூர் பகுதியை அதிமுகவை சேர்ந்த பேரவை இணை செயலாளர் ஈசா செந்தில், வட்டக் கழக செயலாளர் சுரேஷ்குமார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் பொதுவெளியில் மது குடித்த கும்பலை இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டித்தனர்.

இனி பொதுவெளியில் மது குடிக்க கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இன்று இரவு சுரேஷ்குமார் ஈசா செந்தில் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் நாங்க குடிச்சா உங்களுக்கு என்ன வந்துச்சு எங்களை மிரட்டுவியா என கேட்டு வாக்குவாதம் செய்தனர்.

மேலும் தங்களிடம் இருந்த கத்தியால் இருவரையும் சரமாரியாக குத்தினர் . இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய கும்பலை தேடி வருகின்றனர் . இது குறித்த தகவல் அறிந்த அதிமுக எம்எல்ஏக்கள் கே ஆர் ஜெயராம் மற்றும் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் காயமடைந்த இரண்டு பேரையும் சந்தித்து நலம் விசாரித்தனர். போதை கும்பலின் அட்டகாசம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *