கோவையில் போதை கும்பல் தாக்குதல் ; 3 பேர் காயம்
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு ஈச்சனாரி கற்பகம் கல்லூரி அருகே எம் டி எஸ் பேக்கரி உள்ளது. இந்தப் பகுதியில் கஞ்சா மற்றும் போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. நேற்று நள்ளிரவு இந்த பேக்கரி அருகே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர் .
அப்போது போதையில் வந்த ஒரு கும்பல் அவர்களிடம் வாக்குவாதம் செய்து கொடூரமாக தாக்கியது.
இதில் போத்தனூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ், மார்ட்டின், போஸ் ஆகியோர் காயமடைந்தனர் .
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் . தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இது தொடர்பாக மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில் கஞ்சா கும்பல் தொடர்பாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சோதனை நடத்தப்பட்டது.
சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது .இருப்பினும் போதை கும்பல் அட்டகாசம் கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி தகராறு செய்து வருகிறார்கள். கல்லூரி மற்றும் கடைகள் அதிகம் உள்ள பகுதியில் இதுபோன்ற கொடூர தாக்குதல் பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்து உள்ளனர்.
