கோவையில் மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு பெண்கள் ஏமாற்றம்

கோவை கலெக்டர் ஆபீஸ் புகார் மனு பெரும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு..

கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. மாநில அளவில் 1.31 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கோவை மாவட்டத்தில் 11.59 லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கிறார்கள். ஆனால் இதில் ரேஷன் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 60% பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. மாவட்ட அளவில் பெண்கள் வாக்காளர்கள் சுமார் 14 லட்சம் பேர் உள்ளனர். இதில் நான்கில் ஒரு பங்கு பெண்களுக்கு கூட மகளிர் உரிமைத்தொகை போய் சேரவில்லை.

தகுதி இருந்த ஏழைப் பெண்கள் பலருக்கு மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. மற்ற பெண்கள் மகளிர் உரிமைத்தொகை வாங்கும் நிலைமையில் தகுதியான பல பெண்கள் தங்களை அரசுத் துறையினர் நிராகரித்ததால் கடும் வருத்தத்தில் உள்ளனர். ஏற்கனவே பலமுறை விண்ணப்பங்கள் கொடுத்து நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை என்ற வகையில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் விடுபட்ட பெண்கள் தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் மனுக்களை வழங்க குவிந்து வருகிறார்கள்.

கடந்த 4 நாட்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்ப மனுக்கள் ஆன்லைன் மற்றும் நேரடியாக வழங்கப்பட்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மகளிர் உரிமை கூடுதல் நபர்களுக்கு வழங்க எந்த அறிவிப்பும் வரவில்லை. இதனால் மறுமுறை விண்ணப்பித்தவர்கள் பணம் கிடைக்குமா கிடைக்காதா என்று ஏமாற்றத்தில் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *