கோவையில் வணிக கேஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தம்: ஹோட்டல்களில் உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்கள் செயல்படுகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஹோட்டல் உணவுகளை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.

ஹோட்டல்களுக்கு வணிக சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் கடும் போர் ஏற்பட்டிருக்கிறது . இதன் காரணமாக இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் தடைப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கச்சா எண்ணெய் இல்லாத நிலையில் கேஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக கோவை மாவட்டத்திற்கு வணிக கேஸ் சிலிண்டர்கள் வரத்து இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஹோட்டல்களில் உணவு தயாரிப்பு பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .

பெரும்பாலான ஹோட்டல்களில் உணவு வெரைட்டி குறைக்கப்பட்டு இருக்கிறது . அத்யாவசிய உணவுகள் மட்டுமே கிடைக்கும். அதிக நேரம் சிலிண்டர் பயன்படுத்தும் உணவுகளை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என ஹோட்டல் நிர்வாகம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இது தொடர்பாக கேஸ் ஏஜென்சிகள் கூறுகையில் ,” கோவை மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 2 லட்சம் வணிக கேஸ் சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. இப்போதுள்ள சூழலில் வணிக கேஸ் சிலிண்டர்கள் மொத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

இனி வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என எங்களால் யூகிக்க முடியவில்லை. மத்திய அரசு சிலிண்டர்கள் சப்ளை செய்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். வீட்டு கேஸ் சிலிண்டர்கள் சப்ளையும் புக்கிங்கும் கணிசமாக நிறுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இதற்கு உடனடியாக தீர்வு காணும் என எதிர்பார்த்து இருக்கிறோம் என்றனர்.


ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில் இருப்பில் உள்ள சிலிண்டர்கள் வைத்து சமாளித்து உணவு தயாரித்து வருகிறோம். வரும் நாட்களில் என்ன மாதிரி சூழல் இருக்கும் என எங்களால் தெரிவிக்க முடியவில்லை. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அவர்கள் கேட்கும் உணவு வழங்க முடியாததால் அதிருப்தியில் உள்ளனர் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *