கோவையில் வரும் 8ம் தேதி குரூப் 2 தேர்வு..!
கோவை பெரிய கடை வீதிக செயின்ட் மைக்கேல்ஸ் மேல்நிலைபள்ளியில் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கு (தொகுதி-|| மற்றும் || A பணிகள்) தேர்வு நடத்தப்படும். வரும் 8ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
ஓஎம்ஆர் வகையில் கேள்விகள் கேட்கப்படும். 331 தேர்வர் பாடத் தாள் II பொதுப் படிப்புகள் பொது நுண்ணறிவு பகுத்தறிவு தேர்வு எழுதவுள்ளனர். அன்றைய தினம் 348 தேர்வர் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை குழு-II & குழு-IIA சேவைகள் விளக்க வகை, பாடத் தாள் – | தமிழ் தகுதித் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் உதவி பிரிவு அலுவலர் ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மையத்தின் அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் அனைத்து பஸ்களும்
நின்று செல்லும் வகையிலும், தேர்வர்கள் எளிதாக செல்லும் பொருட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.
கோவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டிஎன்பிஎஸ்சி சிறப்பு உதவி மையம் கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக உதவி மைய தொடர்பு எண் 0422-2301114, 0422-2301115, 0422-2301116,1077 என அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் உதவி மைய தொடர்பு எண் மாநகர் காவல் 0422 2300970, | 9498181213 என அறிவிக்கப்பட்டுள்ளது என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
