கோவையில் வருவாய்த்துறையினர் 2வது நாளாக போராட்டம்..

வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. இதில் பேசிய நிர்வாகிகள், நாம் மிகவும் கஷ்டப்பட்டு பணி செய்கிறோம். அனைத்து பாதிப்புகளும் நமக்கு தான் வருகிறது.

நம் உயர் அதிகாரிகள் சொகுசான காரில் வருகிறார்கள். நமக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் குறைவாக இருக்கிறது . அரசிடம் இதை கேட்டு போராடி வருகிறோம். மருத்துவ காப்பீடு, இருப்பிட சான்று, வருமான சான்று என எந்த சான்று கேட்டு பொதுமக்கள் , கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் வந்தால் நேரம் பார்க்காமல் நாம் வேலை செய்து தருகிறோம்.

இதை அரச கவனித்து நமது கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றனர். 90 சதவீத அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருவதால் தாசில்தார் அலுலவலகங்கள் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் நில அளவை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமக்கள் அலுவலர்கள் இல்லாததால் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *