கோவையில் வருவாய்த்துறை ஊழியர்கள் மறியல்: 500 பேர் கைது

தமிழக அரசு வருவாய்த்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள் நியமனத்தை கைவிட வேண்டும்.

காலமுறை ஊதியத்தில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இன்று கோவை கலெக்டர் அலுவலக வளாகத்ததின் முன்பு
வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறியல் செய்த 500க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக வருவாய் துறையினர் கூறியதாவது:- 2024-ம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வேலை செய்து வருகிறார்கள். காலநேரம் பார்க்காமல் வேலை செய்கிறார்கள். பணி பாதுகாப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. உயர் அதிகாரிகள் போல் வருவாய்த்துறை ஊழியர்கள் அனைத்து வசதிகளையும் பெற முடியாத நிலைமை இருக்கிறது.

எனவே அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்க முன்வர வேண்டும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *