கோவையில் வேட்பாளர்களே தெரியவில்லை.. அட்வான்ஸ் பிரச்சாரம்..!

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் பிரச்சார பணிகளை துவக்கியுள்ளனர். குறிப்பாக மாவட்ட நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் இரவு நேர பிரச்சாரம், தெரு முனை பிரச்சாரம், சாதனை விளக்க பிரச்சாரம் போன்ற பல்வேறு வகை பிரச்சார நிகழ்வுகள் பரவலாக நடக்கிறது.

வேட்டாளர்கள் யார், கூட்டணியில் யார் யார் என தெரியாத நிலையிலும் உத்தேசமாக சில கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்படவில்லை. இந்த நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம் செலவு கட்டுப்பாடு எதுவுமில்லை.

மேலும் எந்த நெருக்கடியும் இல்லாமல் அதிக நேரம் பேசலாம். போலீசாரும் கெடுபிடி செய்ய மாட்டார்கள் என்பதால் கட்சியினர் அட்வான்ஸ் பிரச்சாரம்’ களை கட்டி விட்டது. ராஜ வீதி, சாயிபாபா காலனி சுங்கம் மைதானம் போன்ற பகுதிகளில் அடிக்கடி பிரச்சாரம் நடக்கிறது.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களாக அந்த கட்சியினர் வீதி பிரச்சாரம் செய்தனர்.

வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தெற்கு தொகுதி ஏரியாவில் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். சிங்காநல்லூர் எம்எல்ஏ கே.ஆர் ஜெயராம் தனது தொகுதி மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி ஏரியாவில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்துள்ளார் பேச்சாளர்கள் என சிலரை ஏற்பாடு செய்தும் பேச வைத்து வருகிறார்கள்.

திமுக தொடர்ந்து சாதனை விளக்க பிரச்சாரம் செய்து வருகிறது. மோடி முகம் வாக்காளர் விழிப்புணர்வு என சில நாட்கள் மேலோட்டமாக பிரச்சாரம் செய்த பாஜக தற்போது எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.

நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஆனால் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யாமல் வாட்ஸ் அப் சோசியல் மீடியாக்களில் விவரங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இது தொடர்பாக தேர்தல் பிரிவினரிடம் கேட்ட போது, “இப்போது தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகள். பயிற்சி வகுப்புகள், அலுவலர்கள் நியமனம் நடக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரம் யார் செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் வேட்பாளர்கள் தானா என நாங்கள் தெரிந்து கொள்ளவில்லை.

இப்போது என்ன பேசினாலும் அது தேர்தல் பிரச்சார கணக்கில் வராது இருப்பினும் ஆட்சேபகரமான செயல்பாடு உள்ளதா என அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக கண்டறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூத் அலுவலகம் அமைத்திருப்பதாக பல இடங்களில் தகவல் வந்துள்ளது. இவற்றையும் தேர்தல் பிரிவு போலீசார் மூலமாக கண்டறிந்து வருகிறோம். ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *