கோவையில் ஹார்ன் பில் ‘வாக்கு வீரன்’ லோகோ இன்று அறிமுகம் ..

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் ஹார்ன்பில் பறவை உருவம் கொண்ட லோகோ உருவாக்கப்பட்டது .

இந்த லோகோ இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் 75 சதவீதம் அளவிற்கு கூட ஓட்டுப்பதிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து ஓட்டு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது.

பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களது அடிப்படை தேவைகள் நிறைவேறவில்லை. நீண்ட காலமாக தேர்தலில் ஓட்டு வாங்கி ஜெயித்தவர்கள் அடிப்படை வசதிகளை செய்யாமல் ஏமாற்றி வருவதாக அதிருப்தி தெரிவித்து ஓட்டுப்பதிவை புறக்கணிப்பதாக தெரிகிறது .மேலும் பல்வேறு காரணங்களால் மாவட்ட அளவில் ஓட்டு சதவீதம் உச்சபட்ச அளவு எட்டவில்லை.

தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் நிஜமான வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதம் கடந்த காலங்களை விட அதிகமாக இருக்கும் என தேர்தல் பிரிவினர் எதிர்பார்த்து உள்ளனர்.

பொதுமக்களிடம் ஓட்டு போட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஹார்ன் பில் பறவை வடிவில் ஓட்டு வீரன் லோகோ உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த லோகோ அறிமுக விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் ,தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட படர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *