கோவையில் 450 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள்..!?

கோவை மாவட்டத்தில் 3567 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 1117 ஓட்டு சாவடிகள் இருந்தது. இப்போது கூடுதலாக 446 ஓட்டு சாவடிகள் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. ஒட்டு சாவடிகளை பல்வேறு வகையாக பிரித்து அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்டம் வாரியாக சென்சிடிவ் ஓட்டு சாவடிகளை போலீசார் வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக இனம் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஒட்டு பதிவு மிக அதிகமாக உள்ள ஓட்டு சாவடி மிகவும் குறைவாக உள்ள ஓட்டு சாவடி சாதி, மத ரீதியான மோதல், ஓட்டு பதிவு தொடர்பான மோதல், ஒட்டு புறக்கணிப்பு, ஒட்டு போட மாட்டோம் என எதிர்ப்பு உள்ள பகுதியில் உள்ள ஒட்டு சாவடி ஓட்டு பதிவில் முறைகேடு புகார் உள்ள ஒட்டு சாவடி போன்றவற்றை பதட்ட பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

போலீசாருக்கு தேர்தல் பிரிவு அனுப்பிய விதிமுறைகளின் படி கடந்த சில நாட்களாக ஆய்வு பணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் சென்சிடிவ் ஓட்டு சாவடி ஆய்வுகளை முறையாக செய்யவில்லை .

நகரை விட புறநகரில் அதிக ஓட்டு சாவடிகள் இருக்கிறது. மக்கள் வசிப்பிடம் குறைவாக இருந்த போதிலும் அதிக பரப்பளவு பகுதி அதிக தவறுகள் நடக்கும் பகுதியாக புறநகர், கிராமங்களை தேர்தல் பிரிவினர் கருதுகின்றனர்.

பணம் பதுக்கல், மது பாட்டில்கள், சட்ட விரோத செயல்கள் நடப்பது நகரை விட புறநகர்களாக இருக்கிறது. சட்ட விரோத செயல்பாடுகளின் படியும் சென்சிடிவ் விவரங்களை தெரிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் அதிக வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்ட சில பகுதிகளிலும் தற்போது சென்சிடிவ் ஏரியா பட்டியலில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 371 சென்சிடிவ் ஓட்டு சாவடி இருந்தது இந்த எண்ணிக்கையை விட கட்டாயம் அதிகமான அளவில் சென்சிடிவ் ஒட்டு சாவடிகள் இருக்கும். நெட்வொர்க் கவரேஜ் இல்லாத ஓட்டு சாவடிகளும் பதட்ட பகுதிகளில் இடம் பெறும். எனவே தேர்தல் பிரிவினர் அதிக ஓட்டு சாவடிகளை சென்சிடிவ் எல்லைக்குள் வைக்க ஆலோசித்து வருகின்றனர்.

போலீசார் முறையாக தீவிரமாக ஆய்வு செய்து பணியை முடிக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பணிகளை முடிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், ” மாவட்ட அளவில் 450 முதல் 470 ஓட்டு சாவடிகள் சென்சிடிவ் எல்லைக்குள் வர வாய்ப்புள்ளது. இங்கே கூடுதல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு வழங்கப்படும், ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *